New year offer 2017

கனடா செய்திகள்

விண்வெளித்துறையில் சாதிக்க அமேசான் - ஸ்பேஸ் எக்ஸ் போட்டி

08/05/2020

வாஷிங்டன்: விண்வெளித் துறையில் கோலோச்சுவது தொடர்பாக அமேசான் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன.

அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களான அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்குக்கும் இடையே விண்வெளித் துறையில் கோலோச்சுவது என்ற போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரரான ஜெப் பெசாஸின் கை ஓங்கியுள்ளது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை செலுத்தி, உலகளவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை வழங்கவும் 2019ல் அமேசான் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதற்கு இப்போது பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) ஒப்புதல் அளித்துள்ளது.

அமேசான் நிறுவனம் தனது பிராஜக்ட் கைப்பர் திட்டத்தின் மூலம் 3,236 செயற்கைக்கோளைகளை விண்வெளிக்கு அனுப்புவதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதற்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 578 செயற்கைக்கோள்களை பிராஜக்ட் கைப்பர் திட்டத்தின் மூலமாக வரும் நாட்களில் அனுப்பவும், அதன் பின்னர் பிராட்பேண்ட் சேவையை வழங்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. இதனால், ஸ்பேஸ் எக்ஸ்-ஐ போலவே அமேசானும் தனது பிராட்பேண்ட் சேவையை வயர்லெஸ் நெட்வொர்க் மூலமாக அதிவேக இணைப்பை குறைந்த விலையில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026க்குள் அமேசான் தனது செயற்கைக்கோள்களில் பாதியை விண்வெளியில் நிலை நிறுத்தியிருக்கும் என்றும் மீதமுள்ளவற்றை 2029க்குள் அமேசான் செலுத்த வேண்டும் என்றும் FCC உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அமேசானின் துணைத் தலைவர் டேவ் லிம்ப் கூறுகையில், 'இந்த திட்டத்திற்காக எங்கள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ள பத்து பில்லியன் அமெரிக்க டாலர்கள் பிராட்பேண்ட் சேவையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும்' என்றார்.