New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டில் மேலும் அதிகரிப்பு!

08/05/2020

நாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து நாடு திரும்பிய இருவருக்கும், இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் சேனபுரா புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  2,838 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2,537 பேர் குணமடைந்துள்ளதோடு , 290 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றனர். 

இதேவேளை, 68 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.