New year offer 2017

இலங்கை செய்திகள்

எரான் விக்ரமரத்ன - பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

09/18/2021

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் ஒருவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் அவரைத் தடுத்துவைப்பதற்கான உத்தரவை வழங்குவதற்கான அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சர் கொண்டிருப்பதும் அவ்வாறு தடுத்துவைப்பதற்கான உத்தரவை சுமார் ஒன்றரை வருடம் வரையில் காலத்திற்குக்காலம் நீடிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையும் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, அதனூடாக நீதியை நிலைநாட்டவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.