New year offer 2017

இலங்கை செய்திகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் உறுதியாக தெரியவில்லை! காத்திருப்பதில் அர்த்தமில்லை - முக்கிய அறிவித்தல்

06/27/2022

எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறுமா என்பது உறுதியாகத்  தெரியவில்லை என பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினம் எரிபொருள் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

வரையறுக்கப்பட்டமுன்பதிவே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய அசௌகரியம் 

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு காரணமாக எரிபொருள் தாங்கி ஊழியர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலைமையினால் இன்று குறைந்த எண்ணிக்கையிலான எரிபொருள் தாங்கிகளே எரிபொருள் விநியோக முன்பதிவுகளை பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் நிற்பதில் அர்த்தமில்லை என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.